‘ நங் ‘ கென மூஞ்சியில் குத்துதான் விடல.மற்றபடி சரியான காரப் பொங்கல்!
“ஆஸ்திரேலிய போட்டோகிராபருடன் கல்யாணம் நடந்திருச்சின்னு சொல்றாங்க. இரண்டு பேருமே சேர்ந்துதான் வாழறிங்க.அதனால் நல்ல சேதி எதுவும் இருக்கா, கன்சீவ் ஆகி இருக்கிங்களா?” என்று ஒரு கேள்வியைப் போட்டதற்கு பாய்லர் ஆகி இருக்கிறார் இலியானா.
” கன்சீவ் ஆனா சந்தோசம் அடையாதவங்க உண்டா? சொல்லுங்க.? அப்படி நடந்திருந்தா மகிழ்ச்சிதான்! ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள ஆசைதானே! ஆனா எனக்கு அது நடக்கல,! இன்னொன்னும் சொல்றேன்.எனக்கும் அது ஆசைதான். ஆனா அதுக்குன்னு நேரம் காலம் வரணும். நான் இன்னும் கர்ப்பம் அடையல, போதுமா?
எனக்கு கல்யாணம் நடந்திருச்சா இல்லியா என்பதை நான் சொல்லணும்.காதல்னா என்ன, ரிலேஷன்ஷிப்னா என்ன? இந்த இரண்டுக்கும் என்னால் வேறு மாதிரியான விளக்கம் சொல்ல முடியும். அதெல்லாம் தேவதையின் கனவுகள்! உங்க கிட்ட சொல்லனும்னு என்ன அவசியம்.என்னுடைய பெர்சனல் லைப்.அதை உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?”
மூடிட்டு போய்யான்னு விரட்டாத குறைதான்!