புதை குழியில் மூழ்கிக் கொண்டிருந்தவன் கரையில் இருந்த பெண்ணைப் பார்த்து “கையோ,கம்போ கொடுத்து என்ன காப்பாத்த வேணாம்.உன் கவர்ச்சியைக் காட்டு ,கண்ணாரப் பார்த்துட்டு சாவறேன்” என்றானாம். எப்படியெல்லாம் நினைப்பு போவுது பாருங்க! இத்தகைய மனிதர்கள் வாழ்கிற உலகத்தில் படைப்பாளிகளால் எப்படி புரட்சிக்கதைகளை படைக்க முடியும்? பெண்களைப் புரட்டிப்பார்க்கும் கதைகளைத்தான் கொடுக்க முடியும்!
“நான் கவர்ச்சியாக நடிக்கத்தயார் .ஆனால் கதாநாயகி தகுதியை விட்டு இறங்க மாட்டேன்”என்பதில் பலர் உறுதியாக இருக்கிறார்கள். அண்மையில் நடந்த பிலிம்பேர் விழாவில் கலந்து கொண்டவர்களில் ரெஜினாவும் ஒருவர், சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும் பிழைப்பு ஆந்திராவில்தான்! சிவப்புக் கம்பள வரவேற்பில் கணிசமான அளவுக்கு கவர்ச்சி இருந்தால் வாய்ப்புகளுக்கு வழி இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன்தான் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார் ரெஜினா என்கிறார்கள்.
நாலு படம் தேறினால் சரிப்பு!