“நடிக்க வந்தால் படுக்கக் கூப்புடுறான்” என்று ஹாலிவுட்டில் பற்றி எரிந்ததும் பாலிவுட்டிலும் சற்றே தென்னாட்டிலும் சிலர் குமுறி கொந்தளித்துவிட்டார்கள். சில நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக துயரப்பட்டார்கள்.கண் சிவந்தார்கள்.
எல்லாமே ஒரு சீன் மாதிரிதான் நடந்து கடந்தது.!
காலாவின் காதலியாக நடித்த ஹுமா வெறுத்துப் போய் ‘ஹாலிவுட்டில் தண்டிக்கப்பட்டது மாதிரி இங்கெல்லாம் நடக்காதுப்பா’ என்று வெதும்பி இருக்கிறார்.
“ஆவேசமாக சிலர் கிளம்பியதைப் பார்த்ததும் அடடே இங்கேயும் கோபம் வருதேன்னு ஆச்சரியப்பட்டேன். ஆனால் அத்தனையும் புஸ் வாணமாய் புகைஞ்சு போச்சு! ஹாலிவுட் அளவுக்கு இங்கு எதுவும் நடக்காதுப்பா! இங்க பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்ல. அது பெரிய பிரச்னை.அதனால்தான் பெண்கள் வாயைத் திறக்கப் பயப்படுறாங்க,ஹாலிவுட்டில் பாதிக்கப்பட்ட நடிகைகள் தைரியமாக ஆண்களின் பெயரை சொன்னார்கள். இங்கு அது முடியுமா?யாராவது சொன்னார்களா?இல்லையே! முதலில் ஆண் பெண் சமத்துவம் சொந்த வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும் ” என்கிறார்