சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மோடி அவர் பாட்டுக்கு உலகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்,அவரின் சிண்டைப் பிடித்து பிரகாஷ்ராஜ் ஆட்டலாமா?
அதிகார வர்க்கத்தின் உயர்நிலை அதிகாரிகளான ஐ.ஏ,எஸ்.அதிகாரிகள் டில்லியில் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன பஞ்சப் பாட்டோ? இதை கண்டித்து டில்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் சக மந்திரிகளுடன் ! பட்டினிப் போர்!
இதற்காகத்தான் மோடிக்கு ஒரு டிவீட் போட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்,
செம நக்கலுடன்!
“நாட்டின் மிக உயர்ந்த தலைவரே! உடல் பிட்னஸ் சால்ஞ்ச், யோகா, உடல் பயிற்சி இப்படி பரபரப்புடன் இருப்பீங்க. அப்படியே மக்களுக்கும் ஒரு நிமிஷம்! ஆழ்ந்த மூச்சு ! இழுத்து விட்டாச்சா! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேஜ்ரிவாலுடன் சேர்ந்து வேலை பார்க்க சொல்லுங்களேன்! இப்ப உடற்பயிற்சி செய்யுங்க!”
“