லட்சுமி வெடிகள் விளையாட்டையே பார்த்து ரசித்த கண்களுக்கு வருகிற தீபாவளி விண்வெளி ராக்கெட் பறக்கிற எபெக்ட்டை தரப்போகிறது. தவுசன்ட் வாலா எல்லாம் ஓலை வெடிக்கு சமம் தான்!
விஜய் நடித்த படம் தீபாவளி ரிலீஸ் என்பதை இயக்குநர் ஏ,ஆர். முருகதாஸ் என்றோ முடிவு செய்து அறிவித்து விட்டார்.
தற்போது செல்வராகவன் தன்னுடைய என்.ஜி.கே .படமும் தீபாவளிதான் என்பதாக அறிவித்துஇருக்கிறார் . சூர்யாவை வைத்து வித்தியாசமான ஆக்சன் களத்தில் இறங்கி இருக்கும் அவர் நேற்று இரவுதான் அறிவித்தார்.
ஆக இரண்டு உச்சங்களின் ரசிகர்களுக்கும் வருகிற தீபாவளி அதிரடி தலை தீபாவளியாகத்தான் இருக்கும்.