“எம்புட்டு நாளைக்குத்தான் ஆசைய மனசுக்குள்ளேயே வெச்சுகிட்டு அலையிறது? அதான் சட்டுன்னு தயாரிப்பாளராகிட்டார் ஸ்ருதி ஹாசன். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்ட பிறகு அப்பாவின் வாழ்த்து மட்டும் கிடைக்காம இருக்குமா?
அவர்தான் புதுமை விரும்பி ஆச்சே! மகளுக்கு புல் சப்போர்ட். அப்பா அரசியலுக்குப் போன பிறகு அவர் விட்ட இடத்தை மகள்தானே நிரப்பனும்!
படத்துக்கு பேர் ‘மஸ்கிட்டோ பிளாசபி’!
கொசுவைப் பத்தின படம்னு நெனைக்க வேணாம்.நான்கு பிரண்ட்ஸ்கள் பத்தின படம்.காலம் காலமா சொல்லிட்டு வருகிற கலாசாரம், இப்போதைய நாகரீகம் இந்த ரெண்டுக்கும் மத்தியில் நடக்கிற விஷயங்களைத்தான் சொல்லப்போறாங்களாம்.’லென்ஸ்’ படம் கொடுத்த ஜே.பி என்கிற ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்தான் டைரக்டர்.
தயாரிப்பு நிறுவனத்தின் பேர் என்னன்னு சொல்லலியே?
“இசிட்ரோ மீடியா!”
ஸ்ருதி சீக்கிரமா பிரஸ்மீட் வைம்மா!