நடிகைகள் போடாத சோப்புகளுக்கு ‘நட்சத்திரங்கள் நாள்தோறும் உபயோகிக்கும் சோப்’ என்று கூசாமல் பொய் சொல்லுகிற உலகமடா சாமி! அதையும் நம்பி தேய் தேய் என தேய்த்தும் கலர் வராமல் வறண்டு போனவர்கள் ஒவ்வொரு பிராண்ட் சோப்புகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து கண்ணாடியின் ரசம்தான் இளிக்கிறது!
இது இப்படி இருக்க உண்மையிலேயே ஒரு அதிசயம் வடக்கே நடந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக டார்ஜிலிங் சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி குஷியாங் என்கிற இடத்தில் அலிதா என்கிற விடுதியில் தங்கி இருந்தார், பத்து நாட்கள் படப்பிடிப்பு .இந்த விடுதியின் அதிபருக்கு சந்தோசம்.
அந்த விடுதியின் பெயரை ரஜினிகாந்த் #3 எனவும் மாற்றி இருக்கிறார். அதுமட்டுமல்ல .குஷ்பூ இட்லி மாதிரி இங்கு தலைவா ஸ்பெஷல் டீ யும் பிரபலமாகி இருக்கிறது.