இயக்குநர் ‘முரபாசெலன் ‘( பெயர்க்காரணம் சத்தியமா விமர்சகருக்குத் தெரியாது.) வளச்சு வளச்சு திண்டிவனம் பகுதிகளை காட்டும்போதே அடடா இது ஆணவக்கொலை சம்பந்தமான மேட்டராகத்தான் இருக்கும் என்பது தெரிந்து விடுகிறது.
ஆர்.என்,ஆர் மனோகருக்கு படம் முழுக்க ரன்னிங் கேரக்டர். அவர் ஓடுகிறார்.காரில் விரட்டுகிறார்.ஆட்களை விரட்டுகிறார். முக்கியமான கேரக்டர். ஊர் பெரியவர். எம்.பி.யே இவருக்கு கைக்குருவி என்றால் மற்ற செல்வாக்கு சிறப்புகளைப் பற்றி சொல்லவேண்டாம்.
ஆசையாய் அருமையாய் வளர்த்த ஒத்த மகள் பாக்கியம் ஐஸ் வண்டிக்காரனுடன் ஓடி விட்டாள் ,அதுவும் ஒடுக்கப்பட்ட சாதிக்காரனுடன் என்றால் மொத்தை மீசை வச்சிருந்ததற்கு என்ன மரியாதை? போட்டுத் தள்ளுங்கடா என்பதுதான் கதை!
ஒடுக்கப்பட்ட கதாநாயகனாக கஜினி முருகன் , இவரது காதலியாக விஷ்ணு பிரியா.எல்லை கடந்து ஆந்திரா போனாலும் விடாது சனியன் என்பது மாதிரி கஷ்டப்பட்ட வாழ்க்கை. நன்றாக கஷ்டப் பட்டிருக்கிறார்கள்,
என்ன பெரியதாக தப்பா பேசிட்டார் என்று டெல்லி கணேஷை அவ்வளவு கொடூரமாக மனோகர் கொன்றார்? காலமெல்லாம் கைத்தடியாக வாழ்ந்த நண்பனாச்சே!( யோவ் விமர்சகரே! பெத்த மகளையே போட்டுத்தள்ள சொன்ன ஆள் யா!) மனோகருக்கு முரட்டுத்தனமான நடிப்பு.
எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சிங்கம்புலி, மயில்சாமி,ஆர்த்தி .
பவர் ஸ்டார் சீனிவாசனுக்குப் பதிலாக தயாரிப்பாளர் செந்தில்குமாரை ஆட விட்டிருக்கலாம். பாசி மணி விற்பவராக பவரை இறக்கி விட்டிருக்கலாம்.
கடுமையான வெயிலில் பசு மோர் குடிச்ச மாதிரி இருக்கு படம்.