வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு லேசான தாடியுடன் வந்திருந்தார் சிம்பு.
இசை வெளியீட்டு விழாவில், கெளதம்மேனன், ராஜேஷ்.எம், சிம்பு, ஆர்யா, உதயநிதி, சந்தானம், தம்பிராமைய்யா, நரேன், என பலர் கலந்து கொண்டு பேசினாலும் சிம்புவின் பேச்சு ,மேடையில் இருந்தவர்களை மட்டுமல்ல,விழாவிற்கு வந்திருந்தவர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்து விட்டது. சிம்பு கண் கலங்க பேசிய பேச்சு இது தான்!
“ரெண்டு வருசமா நான் நடிச்ச படம் எதுவுமே வெளிய வரல!அதனால் எந்த விழாவுலயும் நான் கலந்துக்கிறதே இல்லை.
கடைசியாக நான் கலந்துக்கிட்ட விழா சந்தானம் நடிச்ச,’ கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் ஆடியோ ஃபங்சன்தான்.
அதுக்கப்புறம், இப்பதான்…. இனிமே இப்படித்தான் படத்தோட ஆடியோ ஃபங்சனுக்குத்தான் வந்திருக்கேன்.
சந்தானத்தை’ மன்மதன்’ படத்துல நான்தான் அறிமுகம் செய்த போது.
அப்ப, நிறைய பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா சந்தானதுக்கிட்ட நல்ல திறமை இருக்கு பெருசா வருவான்னு எல்லார்கிட்டேயும் சொல்லி கன்வின்ஸ் பண்ணித்தான் சந்தானத்தை நடிக்க வச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறாரு. அதை பாக்கும் போது,சந்தோசமா இருக்கு.
அவரோட கம்பேர் பண்றப்ப, எனக்கு டேலண்ட் கிடையாது. என்னோட டேலண்ட்டை உருவாக்கினது என் அப்பாதான்.
இந்த உலகத்துல’ தட்டிவிட’ நிறையபேர் இருக்காங்க, ஆனா ‘தட்டிக்கொடுக்க’த்தான் ஆளில்லை.
ரெண்டு வருசமா என் படம் எதுவுமே ரிலீஸ் ஆகாததால ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அதனாலதான் ஆன்மிகத்தை நாடி,கடவுளைத் தேடிப்போனேன்.
சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டமின்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்தேன். ஆனா, இந்த ரெண்டு வருசத்துல ஒரு சாதாரணமான மனுசனா இருந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன்.
நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன். ஆனா ,இப்ப என்னால அவங்களுக்கு பணம் கொடுக்க முடியல. அவங்கிட்ட செலவுக்கு பணம் கேட்கவே கஷ்டமா இருக்கு.
இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது. ஆனா அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுவிட்டு போயிட்டா.
ஏற்கனவே எனக்குள் இருந்த கஷ்டம் மட்டுமில்லாம, காதலியும் விட்டுட்டு போன கஷ்டம் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது. கடவுள் கஷ்டத்தை கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றான்னு நெனச்சிக்கிட்டேன். எல்லாமே போயி எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருந்தது.
அப்பத்தான் கவுதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிக்கிட்டிருந்தப்ப, தல அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது. அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப ஃபீல் பண்ணினாரு. அவர் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்கிறதையே கவுதம்மேனன் பெருசா நெனச்சாரு. நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித் கூட,’அப்பாகிட்ட உங்க பையன் நல்லா வருவான் ஃபீல் பண்ணாதீங்கன்னு’ சொன்னாரு.
அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பத்தான் நமக்காக வாழுறதை விட மற்றவங்களுக்காக வாழுறதுன்னு முடிவெடுத்தேன்.
இந்த ரெண்டு வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய எழுதினாங்க.
ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால அவங்க என்னை தாங்கிப்பிடிச்சாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா காணாமல் போயிருப்பேன்”
என்று உருக்கமாக சிம்பு பேசினார்.கண்கலங்கியது சிம்பு மட்டும் அல்ல !விழாவிற்கு வந்தவர்களும் தான்!