பிளாக் ஹுயுமர் காமடி ரகம். அது அப்பப்ப வெளிவருது.
நாலு கெட்டவனுங்க லம்பா அடிச்ச பெரிய தொகையோடு ஒரு மலைப் பிரதேசத்தில் ஒதுங்குறாங்க. மாஜி ஜமீனின் வீடு அது. அங்க கிழட்டு ஜமீனும் அவனை நம்பி வாழும் ஒரு கிக்கேத்தும் செம கட்டையும்தான் இரண்டு உருப்படிகள். நாலு கெட்டவன்களில் ஒருத்தனுக்கு அந்த செம கட்டை செட் ஆகுது. கொள்ளை அடிக்க சொன்ன மெயின் வில்லன் அங்க வந்து சேர என்ன நடக்கிறது என்பதுதான் கதை!
முகேஷின் ஒளிப்பதிவு ,அந்தந்த கேரக்டர்களுக்கு உரிய சரியான நடிகர்கள். லொக்கேஷன் என எல்லாமே கச்சிதம். குறிப்பாக உசரமான ஹீரோ ராஜ்பரத், ஓங்கு தாங்கான ஹீரோயின் தேஜஸ்வினி, வரதுவாக வரும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஆகியோரை சொல்லலாம். தேஜஸ்வினியின் கண்களில் நிறை போதை. ‘காதல்னா என்னடா காமம் இல்லாமயா”? என்று ராஜ்பரத்துடன் பேசியே தனது தேகக்கட்டின் வலிமையைக் காட்டுகிற இடம் அசத்தல். கோலிவுட்டுக்கு எப்பவோ என்ட்ரி கொடுத்திருக்க வேண்டிய ஆர்கிடெக்ட்.! விழிகளில் காக்டெயில்!
வசனங்களில் ஜாலம் இருக்கிறது.
ஏ.பி.ஸ்ரீதரிடம் முரட்டுத்தனமான மனிதன் மறைந்திருக்கிறான். சரியாக பயன்படுத்தப்பட வேண்டியவர். ஆங்கில பட பாணியில் எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜெய்.
அடுத்த வாய்ப்பு லாபகரமாக இருப்பதற்கு வாழ்த்துகள்.