ஒவ்வொரு நடிகருடைய அந்தரங்கமும் வாய் திறந்தால் அத்தியாயம் அத்தியாயமாக எழுதலாம் போலிருக்கிறது ! ஆனால் வாய் திறப்பதற்கு அவர்கள் சத்தியவான்களாக இருக்கவேண்டுமே! இந்தியன் பீனல் கோடு எண்ணை சொல்வதுபோல தன்னுடன் படுத்த பெண்களின் எண்ணிக்கை 308 என கணக்குச்சொல்கிறார் பிரபல நடிகர். பேரேடு போட்டு எழுதி வைத்திருப்பார் போல!
சஞ்சய் தத் .சுனில் தத் -நர்கீஸின் மகன்.அம்மாவின் பெயரை இந்தியிலும் அப்பாவின் பெயரை தேவநாகரியிலும் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.
நமக்குத் தெரிந்து இந்த அளவுக்கு ஸ்கோர் பண்ணிய நடிகர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என நம்பலாம். டேட்டிங் வந்த பெண்களின் எண்ணிக்கைதான் இது.
சஞ்சய் தத் வாழ்க்கை மிகவும் சோகமானது.அவர் மீது பல வழக்குகள். அத்தனையிலும் மீண்டு வந்திருக்கிறார். சஞ்சயை மீட்பதற்காக சுனில்தத் பெரும்பாடு பட்டார், இவரது கவலைதான் அவருக்கு,
மகன் போதை மருந்துக்கு ஆளாகி விட்டான் என்பதை அறிந்ததும் அவர் சோகப் புதை குழியில் விழுந்து விட்டார் என்றே சொல்லலாம்.
தன்னுடன் டேட்டிங் வந்த பெண்களில் ஒருத்தி சஞ்சய் தத்தின் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள். அவளை சுடுகாட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டார். அதில் நெகிழ்ந்து போன அவள் நட்பை இறுக்கமாக்கிக் கொண்டு விட்டாளாம். டேட்டிங் வந்த இன்னொருத்திக்கு தத் கசந்து போக அவள் வேறு ஆளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் .
ஆத்திரம் வருமா வராதா?
தன்னுடைய நண்பனின் காரை எடுத்துக் கொண்டு அவளின் அபார்ட்மெண்டுக்கு போனவர் அங்கிருந்த கார் மீது மோதி வஞ்சத்தைத் தீர்த்திருக்கிறார்.
ஆனால் சேதம் அடைந்தது அவளது கார் இல்லை. அவளது புதிய காதலனின் கார்.
அதனால் என்ன பழியை தீர்த்துக் கொண்டாகி விட்டது.
இன்னொரு முக்கியமான சேதி .ரன்கபீர் வீழ்த்திய விக்கட்டுகள் பத்துக்கும் குறைவே என்கிறார்.