சலங்கை கட்டாமலேயே ஆடுவார் ஜூலி. அவருக்கு சலங்கையைக் கட்டிவிட்டால் என்னாகும் ?
“வேணாம்பா” என்று எச்சரித்ததை இயக்குநர் கேட்கவில்லையாம். அப்படி என்னதான் திறமை மண்டிக் கிடந்தது என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்!டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்,என்கிற திரைப்படத்தின் ஆரம்பம் இன்றுபாடல் பதிவுடன் தொடங்கிஇருக்கிறது.
இயக்குனர் அஜய் தான் இயக்குநர்,
.தீனா இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு செல்வா
ஒளிப்பதிவாளராகவும் .மணிவர்மா கலைஇயக்குநராகவும் மேலும்
ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.
விஜய் என்னதான் சொல்கிறார் படத்தைப்பற்றி?
“இந்த படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்கவைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்பதை உணர்வார்கள் .வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தைநான் இயக்கவில்லை. மருத்துவ படிப்பு படிக்க முழு தகுதி இருந்தும் நம் கல்வி
முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமேகாரணம்.படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்.” என்கிறார் இயக்குநர் விஜய்.