சொன்ன சொல்லை காப்பாற்றவிட்டால் என்னென்ன வில்லங்கம் குதிரை ஏறும் என்பது தெரியாதா?
பிக்பாஸ் தயாரிப்பு என்டமோல் நிறுவனத்துக்கும் பெப்சி தொழிலாளர் சம்மேளனத்துக்கும் தற்போது டக் ஆப் வார். இந்த மோதலின் விளைவாக இன்று சின்னத்திரைப் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
“பிக் பாஸ் 1 ஷூட்டிங் நடந்தபோதே பிரச்னை வந்தது. பெப்சி ஊழியர்களை சேர்த்துக்க சொல்லி கோரிக்கை வைத்தோம். என்டமோல் நிறுவனம் அடுத்த சீசனில் வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தது! ஆனால் எங்கள் தமிழ் மண்ணில் நடக்கும் பிக்பாஸ் ஷூட்டிங்கில் உலகநாயகன் கமல் சாரை சேர்த்து 41 ஆட்கள்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மற்ற 350 ஆட்களும் மும்பையைச் சேர்ந்தவர்கள். முன்பு சொன்னபடி பாதிக்குப்பாதியாவது பெப்சிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேணாமா? கமல் சார் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் அங்கு வேலை பார்க்கிறார். அவர் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் எங்கள் பெப்சி ஆட்களை விலக்கிக் கொள்கிறோம்.” என்பதாக பெப்சி நிர்வாகி செல்வமணி தெரிவித்திருக்கிறார்.
பிரச்னை முடியுமா முற்றுமா என்பது தெரியவில்லை,.கமல் பெப்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அவரது படங்களுக்கு நாளை தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவார்களா?