இந்தியத் திரை உலகில் மிகவும் காஸ்ட்லியான படம் என்றால் ‘சங்கமித்ரா ‘படத்தைச் சொல்லலாம்.450 கோடி ரூபா பட்ஜெட். யாராவது ஒரு மந்திரி தயாரிப்பாளராக இருந்திருந்தால் இந்த அமவுண்ட் வெறும் பொறி கடலை. ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இது பெருங்கொண்ட தொகை.
தைரியமாக சுந்தர் சி.யுடன் களம் கண்டார்கள். என்ன விபரீதம் நடந்ததோ ஒப்பந்தம் செய்யப் பட்ட ஸ்ருதிஹாசன் கழன்று கொண்டார்.லண்டனுக்கெல்லாம் சென்று போர் உத்தி, குதிரை ஏற்றம் வாட்பயிற்சி எல்லாம் நடந்தது. அவர் வெளியேறிய பிறகு திஷா பதானி என்கிற கவர்ச்சி நதியை திசை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
படம் தொடங்குவதற்கு முன்னதாகவே 20 கோடி வரை செலவாகி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட்டில் தொடங்கும் என்று சொல்கிறார்கள். ஜெயம் ரவி,ஆர்யா இருவரும் மெயின் கேரக்டர்கள். குதிரை ஏறுவார்களா என்று பார்க்கலாம்,