கியூப் மற்றும் யூ.எப்.ஒ போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதாகவும், தயாரிப்பாளர்களிடம் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு, அதன் மூலம் திரையரங்குகளில் விளம்பரம் மூலமாக வருடத்திற்கு சுமார் 400 கோடி ருபாயை தயாரிப்பாளர்களுக்கு தர மறுப்பதாகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகத்தினரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் குறிப்பிட்டு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் திரையுலகத்தை சார்ந்த முன்னோடிகள் இன்று காலை (10.5.2015) 8மணி முதல் மாலை 4 மணிவரை மாபெரும் உண்ணாவிரதபோராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தினார்கள் .இதில் திரளான தமிழ்த் த்திரையுலகினர் கலந்து கொண்டனர். முடிவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.