போயும் போயும் புடவைகளையா லவட்டிக்கிட்டு போகணும்? விட்டிருந்தால் ‘கேர்பிரி ‘அயிட்டம்சும்ல அள்ளிட்டுப் போயிருப்பா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு என்.ஆர்.ஐ. பொதுவா சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் காஸ்ட்யூம்ஸ்களை திரும்பவும் ஒப்படைப்பதில்லை.அவர்களுக்காக எடுப்பதே காஸ்ட்லியான புடவைகள் என்பதால் நடிகைகளுக்கு திரும்பவும் கொடுப்பதற்கு மனம் இருக்காதோ என்னவோ!
பல தயாரிப்பாளர்கள் இது குறித்து புலம்பியது உண்டு,
இன்றைக்கும் ஜூனியர் என்.டி .ஆர்.அவருடைய ஷூட்டிங் டிரஸ்களை திரும்பக் கொடுத்தது இல்லையாம். அக்கட பூமியில்தான் இன்னொரு சம்பவமும் நடந்து இருக்கிறது, அமெரிக்காவில் வாழ்கிற ஆந்திர தொழிலதிபருக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு.பண உதவிகள் பண்ணுகிறவர்.
அத்தகைய வள்ளல் ! அவர் மட்டும் அமெரிக்காவில் இருந்து தனியாக தனது ஹைதராபாத் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
வந்தவருக்கு ஒரு ஆசை.அமெரிக்காவில் சந்தித்த பிரபல ஹீரோயினுக்கு தனது ஆடம்பர மாளிகையில் டின்னர் கொடுக்க வேண்டும் என்று!
வந்த ஹீரோயினுக்கு அந்த மாளிகையைப் பார்த்ததும் ஆச்சரியம். அந்த நடிகைக்கும் அப்படியொரு ‘பாஷ்’ மாளிகை இருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.
விடிந்தது. மனைவியின் கப் போர்டை திறந்த அந்த தொழிலதிபருக்கு நெஞ்சடைப்பு வராததுதான் குறை. அவரது மனைவி ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த ஐந்து சேலைகளை காணோம்.அவ்வளவும் காஸ்ட்லியோ காஸ்ட்லி !
வீட்டு அம்மணிக்கு என்ன பதில் சொல்வது,விருந்துக்கு வந்திருந்த அம்மிணி சுட்டுவிட்ட கதையை சொல்ல முடியுமா?
சொன்னால் அவர் கதை சோகக்கதை ஆகிடுமே!