எல்லாமே வெஸ்டர்ன் கல்ச்சர் ஆகி விட்டது.
பிடித்தவரை கல்யாணம் செய்வதும், பிள்ளை குட்டி பெற்ற பிறகு அவரை அத்து விட்டுவிட்டு புது பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதும் வெள்ளைக்காரனுக்கு மட்டுமா சொந்தம்? அது நமக்கும் தான்யா!
சினிமாக்காரர்களின் காதலும் கசந்த வாழ்வும்தான் பகிரங்கமாக வெளியில் பேசப்படும் .
காரணம் ,அவர்கள் ‘செலிபிரிட்டி’
சிரஞ்சீவியின் உடன் பிறப்பு.பவன் கல்யாண் இவர் மூன்று கல்யாணம் பண்ணிக் கொண்டவர்,தற்போதைய மனைவி ரஷ்யப் பெண் .இவருக்கு முந்தையவர்தான் ரேணு தேசாய். ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்..
ஆணுக்கு மட்டும்தான் மறுமணம் செய்து கொள்கிற உரிமையா? பெண்ணுக்குக் கிடையாதா?
இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற ரேணு அண்மையில் புனேயைச் சேர்ந்த தொழிலதிபரை கல்யாணம் செய்வதற்கு நிச்சயம் செய்து கொண்டார் .மணக்கோலத்தில் மகன் மகள் இருவருடனும் ரேணு. தனக்குப் பிறந்த பிள்ளைகளை அப்பனிடம் விட்டுவிடாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டதுடன் ‘இனி ஒரு புதிய வாழ்க்கை என்றால் இந்த செல்வங்களுடன்தான்’ என துணிந்து முடிவெடுத்த ரேணுவை பாராட்டியே ஆக வேண்டும்.
பவன் கல்யாண் தன்னுடைய முன்னாள் மனைவியின் புதிய வாழ்க்கைக்கு மனம் நிறைய வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார்.ரேணுவின் துணிச்சலுக்கு முன் இவரது வாழ்த்து ‘ப்சு’!