“அரசியல் வசனமெல்லாம் தூள் பறக்குதாமே ‘சர்கார்’ படத்திலே? வெப்சைட்டில் வெளுத்து வாங்குறாங்களே…ரெண்டு பிட்டு எடுத்து விடுங்களேன்.?” என்றதும் முருகதாஸ் யூனிட் ஆள் அரண்டு போனார்.
“வாயைத் தொறக்கக்கூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டுருக்காங்க. ஆனா அந்த மாதிரி டயலாக் ரஜினிசார்தான் பேசி கேட்டிருக்கேன். பொலிடிகல் பத்தி ரசிகர்களிடம் அப்படித்தானே சொன்னாரு. ஆனா எங்க படத்தில அஞ்சு நாளா ஒரு சாங் எடுத்தோம் .தளபதி சார்தான் மெயின்.அதில நற்பணி,சேவை ன்னு செமையா ,அதிரடியா பண்ணிருக்காரு. ஒண்ணாம்தேதி யு.எஸ் போறோம்.இதான் எனக்குத் தெரியும் ” என்றார் யூனிட் மகான்.
போயிட்டு வந்து நிறைய சொல்லுங்க ப்ரோ!