
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும்புதிய படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் முக்கிய இடங்களில் வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் காமெடியன்களாக நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர்
விவேக்கும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் இன்னொரு முக்கிய நடிகரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது .