“அதென்னவோ தெரியாது.ஸ்கிரிப்ட் எழுதும்போதே அந்த கேரக்டருக்கு சேதுதான் சரியா இருப்பார்னு நினைச்சேன். சேதுவிடம் சொன்னேன் .கொஞ்சம் தயங்கினார் ,பிறகு ஓகே வாங்கிட்டேன்” என்று இமைக்கா நொடிகள் இயக்குநர் அஜய் ஞானமுத்து சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் லீட் ரோலில் நடிப்பவர் அதர்வா.அதனால் தயங்கி இருப்பாரோ? ஆனால் நயன்தாராவுக்கு கணவன் என்கிறபோது சேதுவை விட வேறு ஜாய்ஸ் யார்?
“விஜய் சேதுபதிக்கு படத்தில் 15 நிமிட வேலைகள்தான் .அவரது போர்ஷன் முடிந்து விட்டது. நயன் இதில் இன்வெஸ்டிகேஷன் அதிகாரி. செம ரோல். பின் இருக்கிறார் .”என்றார் அஜய்ஞானமுத்து.