பாலாவுடன் படம் பண்ணிய அனுபவமே பத்து ஜென்மத்துக்கு தாங்கும் . அதிலிருந்து மீண்டு மற்றொரு படம் பண்ணியபோது எங்கேயோ விழ வேண்டிய இடி சசிகுமார் மீது விழுந்தது. ஏப்பை சாப்பையான ஆளாக இருந்திருந்தால் இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பார்கள். சசிகுமாருக்கு உயிர்காக்கும் நண்பனாக சமுத்திரக்கனி இருந்து கை தூக்கி விட்டிருக்கிறார். சூரியன் எழ எழ பனி மறைவது போல சசிகுமார் எழுந்திருக்கிறார்,நாடோடி 2 கை கொடுத்து தூக்கிவிடும் .இதற்கு இடையில் இன்னொரு படம்
அதுதான் அசுரவதம்.
மருதுபாண்டியன் இயக்கம்.
“கதை எப்படி?”
“வளைகுடாவில் எனக்கு கட்டிட வேலை! மனைவியாக நந்திதா, மரத்தைச்சுத்தி பாடுற வேலை எல்லாம் கிடையாது. இங்க வந்து எப்படி செட்டில் ஆகிறேன் என்னென்ன கஷ்டங்கள் .இதாண்ணே கதை” என்கிறார் சசிகுமார்.
“பொதுவா சாதிய பின்னணியுடன்தான் சசிகுமாரின் படங்கள் இருக்கும் என்கிற கருத்து இருக்கு?” என்றது இயக்குநர் மருதுபாண்டியன் குறுக்கிட்டு “அத்தகைய அடையாளங்கள் படத்தில் இல்லை.”என்றார்.
“வில்லன் யார்?”
“எதிரி யார் யார்னு படத்தில் தேடனும்.அதான் படத்தின் சஸ்பென்சாக டைரக்டர் வெச்சிருக்கிறார்” என்றார் சசிகுமார்!