“மழை செமத்தியா பின்னி எடுக்குது காலை கீழே வைத்தாலே அட்டைகள் அப்புது. வலியே இல்லாம ரத்தம் குடிக்கிது! இருந்தாலும் விட மாட்டேன்னு” பிடிவாதமாக கழுகு பார்ட் டூ வை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டைரக்டர் சத்ய சிவா, 2012-ல் நடிகர் கிருஷ்ணாவின் அப்பா பட்டியல் சேகர்தான் படத்தை தயாரித்திருந்தார். படம் காமடி திரில்லர் .கல்லாப்பெட்டியும் நிறைந்தது.
தற்போது அதே இயக்குநர் அதே கிருஷ்ணா-பிந்து மாதவி, அதே யுவன் சங்கர் ராஜா என கோதாவில் இறங்கி இருக்கிறார்கள்.
“முந்தைய கழுகின் தொடர்ச்சின்னு நினைச்சிடாதிங்க, இது வேற மாதிரி. சும்மா சல்லுன்னு கதை பறக்கும். காமடிக்கு மட்டும் எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட்டை சேர்த்திருக்கிறோம். 35 நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிரும்.ராஜா பட்டாச்சார்ஜி கேமரா, திருப்பூர் கணேசன் தயாரிக்கிறார். சிங்காரவேலன் தான் ரிலீஸ் பண்றார். இவ்வளவு உத்திரவாதம் இருக்கு. ருசியான விருந்து திரையில் காத்திருக்கு” என்கிறார் சத்ய சிவா.