“வில்லைப் பிடி அம்பு விடு” என்று போகிற போக்கில் அர்ஜுனனை தேரில் ஏற்றி விடவில்லை கிருஷ்ணன்.! எத்தனை வியூகம், எவ்வளவு ஆலோசனைகள் ,உறவாடல்கள் அத்தனையும் கடந்த பிறகுதான் நடந்ததுதான் பாரத யுத்தம், அதைப்போலத்தான் சிம்புவின் திக்விஜயமும் இருக்குமோ?
எதற்கெடுத்தாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை குடைந்து எடுக்கும் குத்தூசி சுரேஷ் காமாட்சிக்கு சிம்பு படம் பண்ணுகிறார் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?
இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!
இயக்குநர் வெங்கட் பிரபுதான் சூத்திரதாரி ! கதை வசனம் ! தல அஜீத்துக்காக வைத்திருந்த கதையை இங்கிட்டு நகர்த்தி இருப்பாரோ?
“அதெல்லாம் சத்தியமா இல்லைங்க. இது புத்தம் புது கதை. எதனோட இரண்டாம் பாகமும் இல்லை.தனிக்கதை. சூப்பர் திரில்லர்!” என்கிறார் வெங்கட்பிரபு.
“சொன்னதுதான் சொன்னிங்க அப்படியே பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்னை விட்டிருந்தா சூப்பரா இருக்குமே” என்று சந்தடி சாக்கில் சரக்கு ‘கறக்க’ பார்த்திருக்கிறார் ‘தமிழ் படம் 2 இயக்குநர் சி.எஸ் .அமுதன் .
எல்லாம் சரிங்க .வில்லங்கம் வீட்டு ஓட்டை உடைக்காம இருந்தா சரி!