ஆர்யாவுக்கு எதற்காக பிடி வாரன்ட்?
அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லையே என்பவர்களுக்கு ….
இயக்குநர் பாலாவின் படமான ‘அவன் இவன் ‘படத்தில் ஆர்யாவுக்கு முக்கியமான கேரக்டர், இதில் சிங்கம்பட்டி சமஸ்தானம்,காரையார், சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து அவதூறான காட்சிகள் இருந்ததாகக் கூறி ஒரு வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது. இந்த வழக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடக்கிறது.
நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆர்யா உள்பட மூவர் ஆஜராகவில்லை. அதனால் நீதிபதி முரளிதரன் உத்திரவு பிறப்பித்திருக்கிறார்.ஜூலை 13-ல் ஆஜராக பிடிவாரன்ட் போட்டிருக்கிறார்.