பேசப்படுகிற நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அதுவும் குறுகிய காலத்தில்!
நடிகையர் திலகம் படத்துக்குப் பின்னர் அவரது உயரம் மேலும் கூடியது. இளம் வயது, இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது.
“காதல் காட்சிகளில் நெருக்கம் கிறக்கம் முத்தம் இதெல்லாம் கொடுத்தால் இன்னும் புகழ் எகிறுமே?”
“வேணாமே ! எனக்கென ஒரு கம்போர்ட் ஜோன் இருக்கு. கதை கேட்கும் போதே ரொமான்ஸ் நெருக்கம் இருந்தால் நடிக்க முடியாது என சொல்லிடுவேன். இதில் லிப் லாக் கொடுப்பீர்களா என கேட்டால் என்ன சொல்வது ‘ மாட்டேன் ‘என்பதைத் தவிர! ஆனால் இதுவரை யாரும் என்னிடம் முத்தம் கேட்கவில்லை ” என்கிறார் கீர்த்தி கலக்கல் சிரிப்புடன்!