திரு திரு துறு துறு ,அஞ்சாதே , கோ , உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் . தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தெலுங்கு,
மலையாளம் என்று பிசியாகிவிட்டார் .இப்படி முன்று மொழிகளிலும் நடித்து வருபவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவே அதிகம்
ஆசைப்படுகிறாராம் . இது குறித்து அஜ்மல் கூறியதாவது, அது என்ன மாயமோ தெரியல, மலையாளம் ,தெலுங்கு என போனாலும் தமிழ் படங்களில்
நடிக்கும் திருப்தி எனக்க அங்கே முழுமையா கிடைக்கல,இதற்காகவே மலையாளம் , தெலுங்கு படங்களுக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு
முழுக்க முழுக்க தமிழ் படத்தில் கவனம் செலுத்தபோகிறேன். நிறைய பட வாய்புகள் வந்துள்ளன, அவைகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து
நடிக்க இருக்கிறேன் .இதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு (தி.நகர் )குடி பெயர்ந்து வந்து விட்டேன். நல்ல கதையம்சம் உள்ள கதைகளுக்கு
முன்னுரிமை கொடுப்பேன். அதே போல் பெரிய இயக்குனர் சிறிய இயக்குனர் என்ற பேதமெல்லாம் என்னிடம் கிடையாது. தமிழுக்காக ஒரு இந்தி பட
வாய்ப்பைக்கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறேன் . விரைவில் நான் நடிக்கும் படங்களின் பட்டியலை வெளியிடுவேன்.என்கிறார்.