தபு …சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் .அற்புதமான நடிகை. வயது 46.
“வயதாகி விட்டது.வாலிபம் முதுமை பெறுகிறது. கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையே ? கவலையே இல்லையா ? இன்னமும் சிங்கிள் தானா?”
“எஸ். இன்னமும் நான் ஒற்றைப் பெண்தான்! அடுத்த கேள்வி?”
“ஒற்றைப் பெண்ணாகவே இருந்து விட்டோமே என்கிற வருத்தம் இல்லையா?”
” எப்போதுமே இல்லை.”
“எதையோ மிஸ் பண்ணி விட்டோம் என்கிற வருத்தம் கூட இல்லையா?”
” இருக்க வாய்ப்பில்லை.!”
“ஏன்?”
“கல்யாணம் பண்ணினால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையே இல்லாதிருக்கிறபோது அந்த பக்கத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மறுபக்கம் எப்படி இருக்கும் .இந்தப் பக்கத்தை விட சிறப்பாக இருக்குமா என்கிற கருத்துக்கு இடமே இல்லையே?”
“திருமணம் சுகமானதுதானே?”
” கல்யாணமே ஆகாதவளிடம் அது சுகமா சோகமா எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?”
“திருமணம் ஆகவில்லையே என்கிற வருத்தம் இல்லவே இல்லையா?”
“ம்ம்ம்ம்!” ( நெடிய மவுனம்.)
“ஒருபோதுமா?”
“இப்போது வரை!” என்கிறார் தபு.
அழுத்தமான பெண்.!