உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில்,ரசிகர்களின் சரவெடி கேள்விகளுக்கு சற்றும் சளைக்காமல் அதிரடியாகவே பதிலளித்து வருகிறார்.
அவற்றில் சில, உங்களது பார்வைக்கு…
கேள்வி; சார் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க சொன்னது “ஒரு முகத்து மேல இன்னொரு முகத்த போஸ்டரா ஒட்ட முடியாது”, ஆனா உங்கள பாரதியாரா சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை உங்கள் ட்விட்டர் பக்கத்தில் Profile Picture ஆ வச்சிருக்கீங்க. இதற்கு பிரத்யேக காரணம் ஏதும் உண்டா ?
கமல்ஹாசன்; எனது தகப்பன் முகத்தை என் முகத்தில் பொருத்திப்பார்ப்பதில் தவறில்லை.
கேள்வி; நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா?
கமல்ஹாசன்; நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்.
கேள்வி; உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா?
கமல்ஹாசன்; எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.
கேள்வி; ஆண்டவா உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரி ரிலீஸ் செய்யனும்… (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)…
#AskKamalHaasan செய்வீர்களா???
கமல்ஹாசன்; நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது!