பழம்பெரும் திரைப்பட இயக்குனரும் மறைந்த சாண்டோ சின்னப்பதேவரின் மூத்த மருமகனுமான ஆர்,தியாகராஜன் (வயது75) இன்று காலை 6 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.அவரது உடல் தகனம் நாளை காலை 10 மணிக்கு போரூரில் உள்ள மின் மயானத்தில் நடக்கிறது.
மறைந்த சாண்டோ சின்னப்பதேவரின் மூத்த மருமகன் ஆர்,தியாகராஜன் (வயது75) . போரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் , ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.இயக்குனர் தியாகராஜன், வெள்ளிக்கிழமை விரதம்,ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு,அன்புக்கு நான் அடிமை, ரங்கா,ஆட்டுக்கார அலமேலு, தாய் மீது சத்தியம்,தாயில்லாமல் நானில்லை உள்பட 28 படங்களை இயக்கியுள்ளார்.