உத்திர பிரதேசம். புலந்தசர் என்பது சிறு கிராமம்.இங்கு தலித்துகளும் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.
முஸ்லிம் பெண்ணை தலித் இளைஞர் திருமணம் செய்து கொண்டது அந்த சிறு கிராமத்தில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. நல்ல வேளை .யாரும் ஆயுதம் தூக்கவில்லை.
பஞ்சாயத்து கூடி மணம் செய்து கொண்ட வாலிபரின் குடும்பத்தை கிராமத்தை விட்டு வெளியேற சொல்லி விட்டது. இதில் என்ன கொடுமை என்றால் தரையில் துப்பிய எச்சிலை நக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.
வாலிபரின் அப்பா ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.