வேலைக்கு என்று இங்கு வருகிற வட மாநிலத்தவர்கள் எந்த மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை விளக்குகிற படம்தான் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ .
எப்படி இந்த பெயரை வைத்தீர்கள் என்று எவனும் வம்புக்கு வராமல் இருந்தால் சரி!
வி.ஆர்.மூவீஸ் டி.ராஜேஸ்வரி தயாரித்து வருகிற படம். எஸ்,டி வேந்தன் இயக்குகிறார் ,
சரத்குமார்தான் என்கவுன்டர் போலீஸ் அதிகாரி.பொருத்தமான நடிகர். கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார்.எதற்கும் தயார் என களம் இறங்குகிற நடிகை, இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு , தீபக் படத்தொகுப்பு.
இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெற இருக்கிறது.
சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல்முறை ஆகும்..
இயக்குநர் வேந்தனின் கருத்து என்ன?,
“காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை.. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது நோக்கமல்ல.. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.
இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.. கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்” என்கிறார்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.