“கடன் இல்லை.எவரிடமும் லோன் வாங்கவில்லை.அடுத்தவரிடம் கையேந்தும் கஷ்டமும் இல்லை. வசதியான குடும்பம் ,அவர்கள் என் தற்கொலை செய்யணும்” என்று கேட்கிறார் நாக்பால். கூட்டாக தற்கொலை செய்து கொண்ட 11 பேர் குடும்பத்துக்கு வேண்டிய நெருங்கிய சொந்தக்காரர்.
கண்களை துணியினால் மூடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வாயையும் டேப் போட்டு ஒட்டி இருக்கிறார்கள் .இப்படி கொடூரமாக தற்கொலை செய்து கொள்வார்களா என்றும் நாக்பால் கேட்கிறார். அதிலும் வயதான பாட்டியம்மாவினால் தூக்கில் தொங்க முடியாது என்பதால் கழுத்தை நெரித்து கொன்று பக்கத்து அறையில் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த குடும்பம் கடுமையான இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ள குடும்பம் என்கிறார்கள் அண்டை அயலார்கள்.
“காலை மாலை இருவேளையும் காயத்ரி மந்திரம் சொல்வார்கள். தினமும் வீட்டுக்கு வெளியில் உள்ள போர்டில் ஸ்லோகம் எழுதுவது வழக்கம். அதிர்ந்து பேசி கேட்டதில்லை.ஆத்திரப்பட்டதில்லை. ” என்றெல்லாம் நல்லவிதமாகவே சொல்கிறார்கள்.
பிறகேன் மாஸ் சூசைட்?
அவர்கள் எழுதியிருக்கும் குறிப்புகளில் “ஆன்மா ஒன்றே நிலைத்திருக்கும்.அதற்கு மரணமில்லை” என்கிற வாசகமே அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.
அவர்களை மரணக்குழியில் தள்ளியது அதுவாகத்தான் இருக்குமோ!
சர்வேஸ்வரா…இதுவும் உன் லீலைதானா?