‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தொடர்ந்து, கவு தம் மேனனும், சிம்புவும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடைமையடா’.
இப்படபிடிப்பின் போது தான் கவு தம் மேனனுக்கு அஜித் தின்‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் காரணமாக சிம்பு
படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அஜித் படத்துக்கு ஓடினார். இதை சிம்புவும் பட விழா ஒன்றில் புலம்பி தீர்த்தது குறிப்பிடதக்கது! அஜித்
படம் வெளியானதை தொடர்ந்து இப்போது மீண்டும் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆனால் கால்ஷீட்
பிரச்சனை காரணமாக, ‘உங்க இஷ்டத்துக்கு ஆடும் ஆள் நான் இல்ல ‘ என இப்படத்திலிருந்து அதன் நாயகி பல்லவி சுபாஷ் விலகிவிட்டதாக என்று
கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவு தம் மேனன், வேறு கதாநாயகியை தேடிவந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சிமா மோகனை
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’
படத்தில் ஹீரோயினாக நடித்த வர் தான் மஞ்சிமா மோகன்என்பது குறிப்பிடதக்கது.