அடை வச்சு இவ்வளவு நாளாகியும் இன்னுமா குஞ்சு பொரிக்கல என்று கூடைய திறந்து பார்த்தால் கோழி மட்டும் உட்கார்ந்திருக்கு, முட்டையை காணல என்கிற கதை ஆகிப் போச்சு!
லிப்ரா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிக்கப்போறார்னு ஒரு செய்தி. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. கடைசியில் பார்த்தால் முட்டை இல்லாமல் கோழி அடை இருந்த கதையாகி இருக்கு!
உதயநிதி தயாரித்து நடிக்கும் படத்தை மிஸ்கின் இயக்கப்போகிறார் என்கிறார்கள்.
அப்படியானால் முந்தைய செய்தி?
பதில் சொல்ல வேண்டியவர் மிஸ்கின்!
“சாந்தனுவையும் இயக்கப்போகிறாரா? அல்லது அந்தப்படம் கை கழுவலா?