இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரகசிய திருமணம் கொச்சியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றதாக செய்திகள் வலம் வருகிறது. ஆனால் இச்செய்தியை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மறுத்துள்ளனர்.நயன் நடிப்பில் படங்கள் ரிலீசுக்கு தயாராய் உள்ள நிலையில், மேலும் நான்கு படங்களின் படபிடிப்பில் பிசியாக உள்ளார். சென்னையில் படபிடிப்பில் உள்ள நயனை தொடர்பு கொண்டபோது,”என் திருமணம் குறித்து வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை. என் வாழ்க்கையில் தற்போது என் வேலையை தவிர வேறு எதற்கும் இடம் இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகப்பெரிய விஷயம். அப்படி திருமணம் செய்துகொண்டால் ஊரறிய அறிவித்து விட்டுத் தான் செய்து கொள்வேன் என்று கூறினார்.