“துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை”என்று உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கிற தீர்ப்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அமிர்தம் அருந்திய மாதிரி இருக்கும்.துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கஷாயம் குடிச்ச மாதிரி இருக்கும்.
புதுடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நடத்திய சட்டப் போராட்டத்தில் அவருக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது, பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தனது ஆதரவு ஆளுநர்களை நியமித்துக் குடைச்சல் கொடுத்து வருகிறது .அப்படித்தான் கேஜ்ரிவாலையும் நாராயணசாமியையும் துணை நிலை ஆளுநர்கள் கவாத்து வாங்கினார்கள். கசரத் எடுக்க வைத்தார்கள்.
கெஜ்ரிவால் கெட்டிக்கார ஆள் .சட்டத்தின் வழியாக கடுமையாக போராடினார்.
இதோ தீர்ப்பு.
“அரசியல் அமைப்பை மதிப்பது அனைவரது கடமை.துணை நிலை ஆளுநர் மாநில அரசுடன் சுமூகமாக செயல்பட வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்.துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை.அமைச்சரவையின் எல்லா முடிவுகளுக்கும் ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை.எல்லா முடிவுகளையும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டியதில்லை.மாநில நிர்வாகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கிறது.”என்கிறது தீர்ப்பு.
இது தமிழ்நாட்டுக்குப் பொருந்துமா இல்லையா? யாராவது வழக்குப் போட்டு கேளுங்களேன்! இங்கிருக்கிறவர் சட்டம் போடுவேன் உள்ளே தள்ளுவேன் என்று மக்களை பயமுறுத்துகிறாரே?