இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் சூர்யா.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்காலிகமாக சூர்யா37 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்கிறார். இவர்களுடன் மோகன்லால், சமுத்திரக்கனி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், இந்தி நடிகர் போமன் இரானி என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்து வருகிறது. இந்நிலையில்,இப்படத்தில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் ஆர்யா நடிக்க இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க,அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.