வசிஷ்டர் வாயால் பிரம்மா ரிஷி பட்டம் கிடைச்சிருந்தால் பரவாயில்ல. ஒரு பருவப் பொண்ணு வாயால் வந்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது,
தெலுங்குப் படமான அர்ஜுன் ரெட்டியை தமிழில் ரீமேக் பண்ணி கொண்டிருக்கிறார் இயக்குநர் பாலா. வர்மா என்கிற பெயரில் !
சீயான் விக்ரமின் மகன் துருவ் நாயகன்.
நிச்சயம் அது அப்படியே கட் அண்ட் பேஸ்ட்டாக இருக்காது, அப்படி இருக்குமானால் பாலாவின் கற்பனை பழுது பட்டுவிட்டது என்று அர்த்தம்.ஆனால் பாலா கதை சொல்வதில் எமகாதகர். அவரது இயக்கமும் அப்படித்தான் இருக்கும். சவட்டி எடுத்துவிட்டார் என்றுதான் இதுவரை அவருடைய நடிக நடிகைகள் சொல்லிவருகிறார்கள். ஆனால் நடிகை மேகாவோ நேர்மறையாக சொல்கிறார்.
இந்த வர்மாவுக்கு நாயகியாக மேகா என்கிற நடிகையை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் பாலா .அவரது நட்சத்திர தேர்வே கண்ணை வைத்துத்தான் நடக்கும்.” கண்ணு பேசுதுண்ணே”என்று சொல்வார்.
இன்னமும் துருவ்க்கும் மேகாவுக்கும் காம்பினேஷன் ஷாட் எதுவும் எடுக்கல ,
“பாலா ரொம்பவும் மென்மையான டைரக்டர்.மத்தவங்க சொல்ற மாதிரி முரட்டுத்தனமா வேலை வாங்கல .படமும் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி மாதிரி இல்ல.நிறைய மாறி இருக்கு. எனக்கு விக்ரம் சாரைப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு” என்கிறார் மேகா.
இவருக்கு மணிரத்னம் பிடிக்கும்.கமல் ரஜினி இருவரையும் மிகவும்பிடிக்கும்
புத்திசாலிப் பொண்ணு. இப்படி சொன்னால்தான்மா தமிழ் நாட்டில் கால் வலுவாக பதிக்க முடியும்.