செய்திகள் பலவிதம் அதில் ஒவ்வொன்னும் ஒரு ரகம் .அது மாதிரிதான் இதுவும் .!
“சர்கார் பட இயக்குநர் ஏ,ஆர்.முருகதாஸ் சொன்னதை ராதா ரவி கேட்கல , இது உண்மையா ?”
“எவன் சொன்னது? இந்த ராதா ரவி சீதையை விட பதி விரதன். டைரக்டர் போட்ட கோட்டை தாண்ட மாட்டான்! டைரக்டர் என்ன சொல்றாரோ அத மட்டுமே செய்வான்!”
“சர்கார் படத்தில என்ன மாதிரியான கேரக்டர்?”
“டைரக்டரை கேட்டுத் தெரிஞ்சிக்குங்க,அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்!”
“நீங்க மரியாதைக்குறைவாக பேசுறவர்னு சொல்றாங்களே?”
“மரியாதை கொடுக்குறவங்களுக்கு மரியாதைய கொடுப்பான் இந்த ராதாரவி. “
“நடிகர் சங்கம் பற்றி?”
“தோத்துட்டோம்.அத தலைவணங்கி ஏத்துட்டோம். நல்லா நடக்கிறதா இல்லையா என்பத தேர்தல்ல தெரிஞ்சிக்கலாம், திமுக ,அதிமுக, திமுகன்னு வர்றது இல்லையா?”அது மாதிரி வரும்.!”என்கிறார் ராதாரவி.