அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுகிற அளவுக்கு மிரட்டல் என்பது சாதாரணமாகிவிட்டது. டீக்கடை வைத்திருப்பவர்களுக்குக் கூட மிரட்டல் வருகிறது. “போண்டா விலையைக் குறை .இல்லேன்னா குழி வெட்டுவோம்”னு வாட்ஸ் அப் விடுகிறார்கள்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உடன் பிறப்பு பவன் கல்யாண் தீவிர அரசியல்வாதி. அண்ணன் காங்.கட்சியில் இருந்தார் தம்பி ‘ஜனசேனா’என்கிற கட்சியை நடத்தி வருகிறார். அரசியலில் அண்ணனை விட தம்பி சாணக்கியன். பன்முக கலைஞர் .தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பவர் ஸ்டாருக்கு மிரட்டல் வந்திருக்கிறது.
“காரில் விபத்து ஏற்படுத்துவோம்.அல்லது குண்டு வைத்து கொள்வோம்” என்பதாக மிரட்டி இருக்கிறார்கள்.
“இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டேன்”என்கிறார் பவர் ஸ்டார்.