இடுப்பில் ரிவால்வாரை சொருகிக்கொண்டு புறப்பட்ட வீரப்பனை அர்ச்சுனன் தடுத்து நிறுத்தினான்,
“அண்ணே,,கொஞ்சம் நில்லு ! உங்கிட்ட முக்கியமான சங்கதி பேசணும்!”
சேத்துக்குளிக்கு பயம்.வீரப்பனை யாரும் இப்படி தடுத்து நிறுத்து வதில்லை.! வீரப்பன் புறப்படுவதாக இருந்தால் அர்ச்சுனன்தான் சகுனம் பார்த்து சொல்வான். வேறு வேலையாக எங்கேயாவது போவதாக இருந்தால் வீரப்பனே சகுனம் பார்த்து கிளம்பி விடுவான்.
இன்று அர்ச்சுனனே சகுனத்தடை மாதிரி!
சேத்துக்குளிக்கு இறுக்கமாக இருந்தது…அர்ச்சுனனுக்கு அந்த ஜிலு ஜிலு கிளைமேட்டிலும் வியர்ப்பது மாதிரியான உணர்வு! அவன் கொண்டுவந்திருந்த சேதியும் அப்படித்தான்!
வீரப்பன் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. கரகரப்பான குரலில் “அம்மா …வனதேவதை! எல்லாம் உஞ்செயல்.!”என்று வானத்தைப் பார்த்து விட்டு பாறையில் நச்சென்று உட்கார்ந்தான்!
“ம்ம்..! சொல்லு! என்ன சங்கதி கொண்டாந்திருக்கே?”
“நம்ம லோடை ஐயனும் ,அய்யன்தொரை ஆளுங்களும் கடத்திட்டுப் போயிட்டானுங்க.!”
“என்னடா சொல்றே?”
“கொள்ளேகால் பார்ட்டிக்கு நாம்ப அனுப்பிய லோடை வண்ணாத்திப் பாறைக்கு பக்கத்தில வச்சு கடத்திட்டானுங்க!”
ஏறிட்டுப் பார்த்த வீரப்பன் “நம்ப ஆளுங்க அப்பா என்ன பண்ணிட்டிருந்தானுங்க? மந்திக்கு மசுரு புடுங்கிட்டு இருந்தானுங்களா,?”
பத்தி இல்லை!
“கேக்கிறேன்ல , மசுரு புடுங்கினானுங்களா?என்னடா நடந்திருக்கு? சொல்லுடா?”
“கிட்டக்க செக் போஸ்ட் இருந்ததால நம்ம ஆளுங்க துப்பாக்கிய சும்மா வச்சிட்டானுங்க.அருவாள வச்சு புரட்டி இருக்கானுங்க,!சேதம் நமக்கு இல்ல?”
“சேதம் நமக்கு இல்லையா? சந்தனக்கட்டைய லாவிட்டுப் போயிட்டானுங்களே! அது சேதாரமில்லையா?”
“நா உசிர பத்தி சொன்னேன்.!அவங்கள்ல ரெண்டு பேரை போட்டுத் தள்ளியாச்சு! ரெண்டு பேரு தலையையும் சாக்குல போட்டு கொண்டாந்திருக்கானுங்க!”
“எதுக்கு தீயில வாட்டி திங்கிறதுக்கா?லோடை லாவிட்டு போயிட்டானுங்களே…அதுக்கு எவன்டா ஜவாப்பு?”
“எம்மேல ஏன்னே…காய்ரே?பாலவனத்தான் சொல்லியனுப்பிய சேதி இம்பிட்டுதான்!தலையோடு ரெண்டு பேரு மட்டும்தான் வந்திருக்காணுக.மீதிப் பேரு அந்த ஊர்லய மறைஞ்சி கிடக்கிறானுங்க.அய்யனை போட்டுத் தள்ளாம இங்க வரமாட்டணுங்க.இதுதான் சங்கதி”!என்று அர்ச்சுனன் சொல்லி முடித்தான்!
“தலைவரே இப்ப நேத்தில்ல அஞ்சாறு மாசமா அவனுங்க நம்மோடத்தான் மோதிட்டிருக்காங்க.புன்னாச்சிக்கு பக்கத்தில இருக்கிற ஊர்க்காணுக புள் சப்பூர்த்டு! ஊர்க்காரப்பயல்களுக்கு தனமும்சாராயம் கறியும் சப்ளை.!வசியம் பண்ணி வச்சிருக்கானுக,!” என்றான் சேத்துக்குளி.
“அவனுங்க எந்த ஏரியாவ்ல டேரா அடிப்பானுங்க?”
“மேக்காடு….முத்தட்டி, இங்கிட்டுத்தான் சந்தனக்கட்டை வெட்டுவானுகண்ணே!” என்றான் அர்ச்சுனன்.
“சரி நானே பாத்துக்கிறேன்!”
செத்துக்குளிய கூட்டிக்கொடு வடக்கு பக்கமாக இருந்த குகைக்குள் நுழைந்தான் வீரப்பன்.
நாளை நிறைய,,!