முகம் பார்த்து பாராட்டுவதை விட அகம் பார்த்து பாராட்டுவது தான் உண்மையானதாக இருக்கும். அப்படியொரு அகம் குளிர்ந்த பாராட்டு கடைக்குட்டி சிங்கம் கார்த்திக்கு !
தளபதி விஜய் போனில் அழைத்துப் பேசி இருக்கிறார் “சூப்பரா இருக்குய்யா!”
கார்த்தி என்ன சொல்கிறார்.?
“விஜய் சாரை காலேஜ்ல படிக்கிறபோதே தெரியும்..’பருத்தி வீரன் ‘ படம் பார்த்து விட்டு அவர் போனில் என்னை அழைத்துப் பேசியதை என்னால் என்றுமே மறக்கமுடியாது .
அஜித் சார் எப்பவுமே எங்கள் குடும்ப நலம் பற்றி விசாரிப்பார் .அவருக்கு எனக்கும் நல்ல புரிதல் இருக்கு.
என்னை முன்னிலைப் படுத்தி அண்ணன் சூர்யா நடிப்பதாக ஒரு கதையை இயக்குநர் பாண்டிராஜ் சார் தயார் பண்ணி வருகிறார். எங்கண்ணனை எதிர் வரும் காலத்தில் இயக்குவேன் என்கிற நம்பிக்கை இருக்கு” என்கிறார் சின்னவர் கார்த்தி.
அடுத்தடுத்து உயர் நிலை செல்வதுதான் சினிமாவில் சாதனை!