பிரபலமாகிவிட்ட நடிகர்களை அவர்களது படங்களை நக்கல், நையாண்டி செய்வதை ரசிகர்களில் ஒரு சாரார் ரசிப்பார்கள். கெட்ட வார்த்தை வசனங்களை கேட்பதில் ஒரு கிளுகிளுப்பு. கதையே இல்லாமல் இப்படிப்பட்ட சங்கதிகளை வைத்துக் கொண்டு படம் எடுப்பது அவ்வப்போது நிகழும். சம்பந்தப்பட்ட நடிகர்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை,
ஆனால் அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள், சின்னதாக தங்களின் நடிகர்களைப் பற்றி எகிடு மொகுடாக கருத்து வந்தால் பிரித்து மேய்ந்து உலை வைத்துவிடுவார்கள்.அப்படியொரு நிலை தமிழ்ப்படத்துக்கு வர இருக்கிறது என்று இயக்குநர் வெங்கட் பிரபு எச்சரித்திருக்கிறார். இவ்வளவுக்கும் இயக்குநர் சி.எஸ்.அமுதனும் வெங்கட் பிரபுவும் நண்பர்கள்.
“முதல் பார்ட் தமிழ்ப் படம் வந்தபோது சோசியல் மீடியாக்களில் விஜய்,அஜித் ரசிகர்கள் அவ்வளவாக இல்லை.ஆனால் இப்போது அவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். படம் வெளியானதும் வச்சு செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை அமுதனிடமே சொல்லி விட்டேன்” என்கிறார் வெங்கட் பிரபு.
வெளுத்துக் கட்டுங்க மக்களே!