“சிக்னல் விடு…..சிக்கிச்சுன்னா நீ ராஜா. .சிக்கலேன்னா வெறும் கூஜா!” என்று சென்னை மாநகர வி.ஐ.பி.க்களுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.!
பெருத்த பணமும் பருத்த தொப்பையுமாக இருக்கிற ஜொள்ளர்களுக்கு முதல் அம்பு. !
கோலிவுட் நடிகைகளின் பெயர்களுடன் அவர்களது ஒரு மாதிரியான படங்களும் இருக்குமாம்,எல்லாமே செல்போன் வழிதான். அண்மையில் போலீசிடம் மாட்டிய முருகப்பெருமான் ,கலையரசன் என்கிற இருவரது செல்களில் பல சித்திரங்கள் சிக்கி இருக்கின்றன. அவர்களின் செல்போன்களில் 70 கோலிவுட் நடிகைகளின் படங்கள். ரேட் விவரம்! சினிமாவில் தலையை காட்டிவிட்டாலே அவர்களும் நட்சத்திரங்கள்தானே!
பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு ” இவருடன் ஒரு நாள் நைட் இருக்க 40 லட்சம் வரை தரத் தயார்”என ஒரு கஸ்டமர் மெசேஜ் அனுப்பி இருக்கிறான். அவன் சம்பாதித்த துட்டா அல்லது அப்பன் பாட்டன் பூட்டன் சம்பாதித்ததா என்பது தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட இருவரும் எப்படி மாட்டினார்கள் என்பதற்கு ஒரு கதை இருக்கிறது.
“உங்களுக்கு விருப்பம் இருந்தால் வி.ஐ.பி..க்களுடன் டேட்டிங் செல்லலாம்.தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.30 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் “என டி.வி. நடிகை ஜெயலட்சுமிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். நடிகை கொடுத்த புகாரில் சிக்கியவர்கள்தான் முருகப்பெருமானும் கலையரசனும்.!போகிற போக்கைப் பார்த்தால் டோலிவுட்டை விட கோலிவுட் ஸ்கோர் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது! தேவுடா..!
ஆனால் இவர்களுக்கு பின்னால் பெரிய பிக் ஷாட் கள் இருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.
ஒன்னும் ஆகப்போவதில்லை. எல்லாமே பரபரப்பு செய்திதான்!