ஆரம்பத்தில் சொன்னதையெல்லாம் அவசரம் அவசரமாக நம்ப சூப்பர் ஸ்டார் மறந்திட்டே போறாருங்கோ..கடைசியில் “கட்சியா, எப்ப சொன்னேன். ஆன்மீக வளர்ச்சிய பத்தின்னா சொன்னேன்”என்று அதிர்ச்சி அளித்து விடக்கூடாது.
“ஒரே நாடு ,ஒரே தேர்தல் னு சொல்றாங்களே ,நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?”
“நல்ல ஐடியா. அரசியல் கட்சிகளுக்கு நேரம்,காலம்,பணம் மிச்சமாகும்”
“தேர்தலில் போட்டி போடுவீங்களா?”
“போட்டி போடுவது பற்றி அப்புறமா முடிவு செய்வேன்!” ( நாம்ப எல்லோரும் காவலர்கள். எல்லா தொகுதிகளிலும் நிப்போம் “னு சூடேத்தி விட்டது நீங்க தானே தலைவா!”)
“தமிழக அரசில் ஊழல் தலை விரித்து ஆடுதுன்னு பிஜேபி தலைவர் அமித் ஷா சொல்லிருக்காரே? உங்க கருத்து என்ன?”
“சொன்னது ஷா. அவரிடம்தான் மீடியா கேட்கணும்!”
“எட்டு வழிச்சாலை?”
“இண்டஸ்ட்ரி வளரனும். கொஞ்சமா நிலத்தை எடுக்கலாம். விவசாயிகளுக்கு சந்தோசம் தரும் வகையில் அரசு காம்பென்சேஷன் கொடுக்கணும் ” என்கிறார் ரஜினி!
ரஜினி மாதிரி உலகநாயகனும் தாடியை தடவுவாரா,?