பர்கூர் பாரஸ்ட் ஏரியா. கோயில் நத்தம்.பாரஸ்ட் கார்டுகள் சிவனய்யா,பசவய்யா இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
” டெய்லி பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர்றியே, எபெக்ட் தெரியிதா?” பசவய்யாவிடம் கேட்டான் சிவனய்யா.
பசவய்யாவுக்கு கல்யாணம் நடந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது,. அனுபவசாலி சிவனய்யாவிடம் அவ்வப்போது ஐடியா கேட்டுக்கொள்வான். பெண்கள் விஷயத்தில் சிவனய்யா மோசமானவன்.ஆதிவாசி பெண்களை விடுவதில்லை. இவன் வருவது தெரிந்தால் தூரமாக வரும் பெண்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். கார்டு வேலை, ஓசியில் பெண்களை அனுபவிக்க பெரும் உதவியாக இருந்தது.
பசவய்யாவைப் பார்த்து சிரித்த சிவனய்யா “பேரிச்சம் பழத்தில் நிறைய அயர்ன் இருக்கு,!அந்த நேரத்தில கொஞ்சம் ஜாதிக்காயை வாய்ல போட்டு வொதக்கி வச்சிக்கிட்டு அப்பப்ப எச்சில மட்டும் முழுங்கிட்டு வந்தின்னா இன்னும் விசேசமாக இருக்கும்” என்றான்.
பேசிக்கொண்டே வந்தவன் அடுத்த அடி எடுத்து வைக்க முழங்காலை பதம் பார்த்தது பெரும் கல்! பசவய்யாவுக்கு ஐடியா கொடுத்து வந்தவன் “ஐயோ”என அலறியபடியே தரையில் விழுந்தான்.
பசவய்யாவின் தோள் பட்டையையும் ஒரு கல் . தாக்கியது. எந்த பக்கம் இருந்து வந்தார்களோ பத்து ,பதினைந்து பேர் இருக்கலாம் .கோழியை அமுக்குவது மாதிரி இருவரையும் அமுக்கி கொத்தாக தூக்கிக்கொண்டு மலைச்சரிவில் சரிந்து மறைந்தனர்.
சிவனய்யாவின் வலது தோள்பட்டையை இரும்புக்கம்பியினால் அடித்தான் வீரப்பன்.எலும்பு உடைந்து விட்டதோ என்னவோ, அலறலைக் கேட்க அந்த காட்டில் யார் இருக்கிறார்கள்.அடுத்த அடி இடது தோள்பட்டையில்!
இப்படி அந்த இருவரையும் இரும்புக்கம்பியினால் மாறி மாறி அடித்ததில் அவர்கள் ரத்தமாகிப் போனார்கள்.
இருவரின் குரல் வளையையும் தனது இரு கைகளால் நெரித்தபடி,” இதான் கடேசி வார்னிங்,! எங்காளுங்க 11 பேரையும் ஜெயில்ல அடைச்சிட்டா சும்மா விட்ருவனா? உங்கள உசிரோடு விட்டு வச்சிருக்கிறது சேதி கொண்டு போறதுக்குத்தான்.!உங்க அதிகாரிகிட்ட போய்ச்சொல்லு! வீரப்பன் மஞ்ச பூசிட்டு வளையல் போட்டுக்கிட்டு இருக்கல பெரிய மீசை வச்சுருக்கான்.சரியான ஆம்பளன்னு சொல்லு . இனியும் என்னை கிராஸ் பண்ணுனா குடும்பத்தையே கருவறுத்துருவேன்.”. என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.
பசவய்யா,சிவனய்யா,இருவரின் கைகளையும் பின்பக்கமாக கட்டி விட்டு கழுத்தில் மணிகளைத் தொங்கவிட்டனர்.
நாளை ? பிபின் கோபால கிருஷ்ணா.!