“நாம்ப நிறம் கம்மி ,அவன் கொஞ்சம் வெளுப்பா இருக்கான் , அதனால நாம்ப டம்மிங்கிற நினைப்பு இருக்கவே கூடாது .ஒருவேளை வெள்ளைக்காரன் நம்ம ஆண்டதினால இந்த மனப்பான்மை வந்திருக்குமோ” என்று மக்கள் செல்வன் விஜயசேதுபதி சொன்னபோது அரங்கமே ஆம் என ஒப்புக் கொள்வதுபோல ஆர்ப்பரித்தது.
விஜய் டி .வி.யின் சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில் ‘சீதக்காதி ‘படத்தின் மேக்கிங் ஒன்றை வெளியிட்டார்கள். அதை கலந்து கொள்வதற்காக இயக்குநர், இசை அமைப்பாளர் விஜய் சேதுபதியுடன் வந்திருந்தார்கள்.
“நாட்டுப்புறக்கலைகள் என்பது நம்ம கலைகள்.இதை வெளியில் இருக்கிறவங்க மதிக்க மாட்டங்க,நாமதான் கொண்டாடனும் ” என்றார்.
அவர் சொன்னதற்காகவே பரிசு கொடுத்தது மாதிரி இருந்தது. முதல் பரிசை நாட்டுப்புற பாடகர் செந்திலுக்கு கொடுத்து விட்டார்கள்.