யோசித்துப் பாருங்கள்.
தினமும் ஒரு தகவல் தருகிறார் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி.
“அவர் என்னை பலவந்தம் செய்தார்”, “வாய்ப்புகள் தருகிறேன் ,படுக்கையை பகிர்ந்து கொள் என்றார்”. “இவர் என்னை இந்த ஹோட்டலில் சந்தித்தார் இணக்கமாக இருந்தோம்” “அவர் கட்டாயம் வாய்ப்பு உண்டு .ஜாலிலோ ஜிம்கானாதான்”இப்படி எத்தனையோ பேர்களை அடையாளம் காட்டுகிறார்.
ஒரு நடிகை ஒரு தடவை ஏமாறலாம். இரண்டாம் முறையும் ஏமாறலாம் . ஆனால் தொடர்ச்சியாக ஏமாந்திருக்கிறார் என்றால் சினிமாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்?அல்லது அந்த நடிகையின் வழக்கமே அதுதானா?
கேட்கத் தோன்றுகிறது.
திரை உலகம் என்பது ஆணாதிக்கம் உள்ள துறைதான்.அங்கே இருப்பவர்கள் .புத்தர்களும் அல்லர் இந்திரன்களும் அல்லர்.
கூடையில் இருக்கும் பழங்களில் அழுகியவையும் உண்டு.அதனால் மொத்தப் பழமும் கெட்டுப்போனவை என ஒதுக்கிவிட முடியாது. ஸ்ரீ ரெட்டியை வைத்து மற்ற நடிகைகளும் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து விடக்கூடாது.ஆனால் நினைக்கும் அபாயமும் உண்டு.! ஸ்ரீ ரெட்டி ஆக்டபஸ் மாதிரி.! அவரது கரங்கள் எல்லை கடந்து தமிழ் நாட்டுப் பக்கமும் வந்து விட்டது .
ரசிகர்களின் அன்புக்குரியவர்களை காமாந்தகாரர்களாக அடையாளம் காட்டுகிறார். பெண்களை ருசிக்கும் பித்தர்கள் எனச்சொல்கிறார். இன்று வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ஒருவர், பிரபலமான ஒளிப்பதிவாளர் என இருவரை தெருவுக்கு இழுத்திருக்கிறார்.
பதில் சொன்னாலும் வம்பு என எல்லோருமே ஒதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இது ஸ்ரீ ரெட்டிக்கு வசதியாகி விட்டது.ஏறி அடிப்பது ,முடிந்தவரை முட்டியை பெயர்ப்பது எனஇறங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. கை குலுக்கி யவர்கள் கூட இன்று வயிறு கலங்கி நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கிற திரை உலக சங்கத்தினர் இதற்கு முடிவு கட்டுவார்களா?