“பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற்பின்னையே- நித்ய கன்னியே!” எனப் பாடிப்பறந்த-படர்ந்த காலமும் இருக்குமல்லவா! அப்படித்தான் அகிலும் ஸ்ரேயாவும் காதலில் மயங்கி முயங்கி இருப்பார்கள். மணமேடை காண்போம் என கனவில் மிதந்த அந்த ஜோடிக்கு என்ன ஆச்சோ,ஏது நடந்ததோ!
காதல் முறிந்தது.
அக்கினேனி அகில் ,ஸ்ரேயா பூபால் இருவரும் பிரிந்தனர்.
லண்டனில் ஷூட்டிங். அகில் நடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென இரண்டு நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்புக்கு வரவில்லை,
காரணம் தெரியாமல் படக்குழுவினர் திகைத்து நின்றனர் . இயக்குநரும் ஒன்றும் சொல்லவில்லை.
பின்னர்தான் தெரிந்தது.
“அகிலை தொல்லை பண்ணவேண்டாம் .அவரின் காதலிக்கு கல்யாணம் நடந்து விட்டது.அவர் ஆடிய மைதானத்தில் இன்னொருவன் பந்து விளையாடுவதை எப்படி சகித்துக் கொள்வார்.?அவர் அப்செட்.டிஸ்டர்ப் செய்யவேண்டாம்” என சொல்லிவிட்டது தலைமையிடம்.
அப்பா அக்கினேனி நாகார்ஜுனா காதலித்து அமலாவைக் கைப்பிடித்தார். அவரது பிள்ளையின் முதல் காதலே தோல்வி!
கலங்காதிரு மனமே!