சில நேரங்களில் கண்ணக்கட்டிக்கொண்டு வரத்தான் செய்யும். மணிக்கணக்கில் காத்திட்டிருப்பாங்க, மொட்டை வெயிலையும் பொருட்படுத்தாம தனது அபிமான நடிகரை பார்ப்பதற்காக ரசிகர்கள் நிப்பாங்க. எம்.ஜி.ஆர்., சிவாஜி இவர்களைப் பார்ப்பதற்காக பெட்ரோமாக்ஸ் லைட் பிடிச்சிக்கிட்டு ராத்திரியிலும் காத்திருந்தாங்க. அதெல்லாம் ரசிகன் வச்சிருக்கிற காதல் .பாசம்.பற்று! ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்தால் போதும் ,அவனுக்கு விருந்து சாப்பிட்ட மாதிரி! கையை அசைப்பதில் என்ன கஷ்டம்? ‘தபாங்’ புரமொஷனுக்காக அமெரிக்கா,கனடா சென்றிருந்த சல்மான்கான், கத்ரினா இருவரில் கத்ரினாவுக்கு அனுபவம் புதிசு!
வான்கூவரில் காரை நோக்கிச்சென்ற கத்ரினாவுடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் ரசிகைகள் ஆசைப்பட கத்ரினாவுக்கு கோபம்.
“ஒன்னு தெரிஞ்சிக்குங்க, இந்த மாதிரி நடக்காதீங்க,ஷோ ரொம்ப நேரம் நடந்ததால டயர்டா இருக்கு !” என கத்ரினா சொல்ல ரகளை ஆகி விட்டது.
” நல்ல முறையில் நடக்க தெரிஞ்சிக்க. நீ ஒரு நடிகை. உன்னை பார்க்க ரொம்ப தொலைவிலிருந்து வந்திருக்கோம் ,மதிக்க கத்துக்க” என கூறி இருக்கிறார்கள்.
“அமைதியா இருங்க”
“அட உனக்காக நாங்க வரலம்மா. சல்மானுக்காக வந்திருக்கோம்”
யார் மீது தப்பு சொல்லுங்க!